சாதிஎன்றும் மாதங்கள் என்றும்
மாறிவிட்ட நிலையிலே -இங்கு காசு பணம் இருந்து விட்டால் காலில் விழும் உலகடா நீதி என்றும் நியாயம் என்றும் விடியும் வரை பேசலாம் பேசுவதை கேட்பதற்கு நிறையபேரும் கூடலாம் கூடி நின்ற கூட்டம் பின்பு கோசம் போட்டு வாழ்த்தலாம் கூட்டம் முடிந்து போனபின்னால் கூட யாரு சொல்லடா? வாழ்ந்து முடிந்த அனுபவத்தில் பார்த்ததை நான் சொல்கிறேன் உன் பயணம் வெற்றி அடைவதற்கு பக்குவத்தை சொல்கிறேன் நீ வாழவேண்டும் வளர வேண்டும் என்பது என் ஆசை =அதில் சஞ்சலமோ சங்கடமோ கொஞ்சம் கூட இல்லை
No comments:
Post a Comment